10-ந்தேதி கரீனா கபூர்- சயீப் அலிகான் நிச்சயதார்த்தம்!
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
இந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். சயீப் அலிகானுக்கு 41 வயதாகிறது. கரீனாவுக்கு 31 வயது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வந்தனர். படங்களில் இணைந்தும் நடித்து வந்தார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி இரு வீட்டு பெற்றோரும் வற்புறுத்தி வந்தார்கள்.
சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவியான நடிகை அமிர்தாசிங்கை 1991-ல் மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004-ல் விவாகரத்து செய்து கொண்டனர். கரீனாகபூரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சயீப் அலிகான் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கரீனா- சயீப் அலி திருமணம் மார்ச் 23-ந்தேதி நடக்கிறது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
Comments
Post a Comment