நம்பர் 1 இடத்தை பிடிக்க 4 ஹீரோயின்கள் கடும் போட்டி!!!

தமிழ் சினிமாவில் த்ரிஷா, அசின், நயன்தாரா, தமன்னாவின் மவுசு குறைந்துவிட்டது. நம்பர் ஒன் இடம் காலியாக இருப்பதால் அந்த இடத்தை பிடிப்பதில் 4 இளம் நடிகைகளுக்குள் கடும்போட்டி நிலவுகிறது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, அசின், நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகளுக்கான மார்க்கெட் குறைந்து வருகிறது. அசின் பாலிவுட்டில் கவனம் செலுத்துகிறார். நயன்தாரா, பிரபுதேவா வுடன் காதல் வலையில் விழுந்த பின் சினிமா விலிருந்து ஒதுங்கினார். இப்போது பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. த்ரிஷா, வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த நம்பர் 1 நடிகை யார் என்று போட்டி எழுந்துள்ளது. இந்த இடத்தை பிடிக்க காஜல் அகர்வால், அமலா பால், ஹன்சிகா மோத்வானி, சமந்தா ஆகிய 4 இளம் நடிகைகளுக்குள் ரேஸ் நடக்கிறது.

விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' படங்களில் நடித்து வருவதால் காஜல் அகர்வால் உற¢சாகத்தில் இருக்கிறார். விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானி அடுத்து ஹரி இயக்கும் 'சிங்கம் 2' படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 'வேட்டை மன்னன்' படத்திலும் நடிக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் நடிக்காமலே போட்டி களத்தில் முன்னேறி வரும் நடிகை, அமலா பால். அதே நேரம், மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கும் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கும் சமந்தா மற்ற மூன்று நடிகைகளுக்கும் போட்டியாக களத்தில் உள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள ரிச்சாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. தீக்ஷா சேத்துக்கு 'வேட்டை மன்னன்' படம் மட்டும் உள்ளது.

Comments