
நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கமல்ஹாசன். "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..." பாடல் காட்சியை படம் பண்ணும்போது ஒரு ஷாட் எடுத்து விட்டு அடுத்த ஷாட்டிற்கு தேடினால் ஆள் இருக்கமாட்டான். சினிமா மீது அவருக்கு அப்பொழுதே ஆர்வம் அதிகம். அதனால் ஏ.வி.எம். ஸ்டுயோவிற்குள் இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் ஏதாவது ஒரு படத்தை பார்க்க பறந்திருப்பான். உள்ளே படவேலைகள் நடந்து கொண்டிருக்கும். ஏதாவது ஒரு படமோ, வி.ஐ.பி.களுக்காக திரையிடப்படும் ஒரு படத்தையோ பார்க்க குறிப்பிட்ட நபர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இருக்காது. அதனால் சிறுவன் கமல், ஆப்ரேட்டர் ரூமிற்குள் போய் அங்கு இருக்கும் துவாரங்களின் வழியாக படக்காட்சிகளை பார்த்துக் கொண்டிருப்பான். அந்த கமலை அவரது சித்தப்பா சந்திரஹாசன்(சாருஹாசனின் தம்பி) தேடிக் கண்டுபிடித்து சூட்டிங் ஸ்பாட்டுகளில் கமலை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வார். சந்திரஹாசன் இருந்ததால், ஏ.வி.எம்., நிறுவனத்தில் பணிபுரிந்த எங்களுக்கு அந்த சிறுவனிடம் வேலை வாங்குபவது சுலபமாக இருந்தது.
Comments
Post a Comment