தமன்னாவும், பக்திப் பழமும்!!!

நடிகை தமன்னா தற்போது பக்திப் பழமாகி விட்டாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.

ஒரு காலத்தில் தமன்னாவுக்கு தமிழில் அத்தனை மவுசு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த வேங்கைக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அம்மணி தெலுங்கில் பிசியாகத் தான் இருக்கிறார். சும்மா ஓடி, ஓடி நடிக்கிறார்.

ஆனால் தற்போது தமன்னாவைப் பார்ப்பவர்கள் என்னாச்சு இந்த பொண்ணுக்கு இப்படி பக்தி மானாய் மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறார்களாம்.

என்ன நம்ப முடியவில்லையா, அட நம்புங்கப்பா. ஹைதராபாத் வந்தால் போதும் தமன்னா கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாராம். அட அப்படி என்ன தான் உருகி, உருகி வேண்டுகிறார் என்று தான் தெரியவில்லை.

மும்பைக்கு சென்றால் தனது வீட்டில் ஹோமம், பூஜை நடத்துகிறாராம். தற்போது தமன்னா இருக்குமிடம், போகுமிடமெல்லாம் பக்தி மயமாக உள்ளது.

பார்த்து, புகை ஜாஸ்தியாக கண்ணைக் கெடுத்துடப் போகுது...!

Comments