பசங்களுக்குப், 'பாம்பு' பெட்டர்!; சொல்கிறார் மல்லிகா ஷெராவத்!!!

எனக்கு ஆண்கள் கொடுத்த முத்தத்தை விட 'ஹிஸ்' படத்தில் பாம்பு கொடுத்த முத்தம்தான் பிடித்திருக்கிறது. ஆண்களை விட பாம்புதான் எனக்கு பெஸ்ட் 'லவ்வர்' என்று 'டெர்ரர்' ஆக கூறியுள்ளார் மல்லிகா ஷெராவத்.

மேலும் வர வர தனக்கு ஆண்கள் மீதான ஆர்வம் குறைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளது, மல்லிகா மோகத்தில் உள்ள ஆண்களின் மனதில் தீயை பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

தசாவதாரத்தில் வில்லியாக வந்து போன 'வடக்கத்தி அல்வா' மல்லிகா ஷெராவத், சமீபத்தில் ஒஸ்தி படத்தில் ஓய்யாரமாக ஒரு ஆட்டம் போட்டு கலக்கி விட்டுப் போனார். தற்போதெல்லாம் இவர் பெரும்பாலும் ஹாலிவுட் பக்கம்தான் அதிகம் புழங்கி வருகிறார். இந்த நிலையில் லக்கி அன்லக்கி மற்றும் கிஸ்மத் லவ் பெய்சா டில்லி என்ற இரு படங்களுக்காக இந்தியா வந்திருந்தார்.

அப்போது ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அதிரடியாக கருத்துக்களைக் கூறி கலக்கியுள்ளார். மல்லிகாவின் பேட்டியிலிருந்து சில துளிகள்...

பாலிவுட்டுக்கு ஹாலிவுட் பெட்டர்... பாலிவுட்டில் நடிப்பது ரொம்பக் கஷ்டம். ஹாலிவுட்டில் அப்படியில்லை. அங்கு ஈகோ கிடையாது, பாலிட்டிக்ஸ் கிடையாது, குறிப்பாக பின்னால் பேச மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் முகத்துக்கு நேர் பேசி விடுவார்கள். தெளிவாக இருப்பார்கள். சந்தர்ப்பவாதம் கிடையாது. நட்பு ரீதியான, தொழில் முறையிலான அணுகுமுறைதான் அங்கு முக்கியமானது. ஆனால் பாலிவுட் இதற்கு நேர் மாறாக உள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தபோது மிகவும் எளிமையாகப் பேசினார். அவர் என்னிடம் பேசுகையி்ல், சுதந்திரத்தின் வேட்கைக்கு அமெரிக்கா எப்போதுமே தலைவணங்குகிறது. அதில்தான் அமெரிக்காவை கட்டியெழுப்பியுள்ளோம். உங்களின் கலைச் சேவைக்கு நான் மரியாதை செய்கிறேன். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்று கூறி என்னை வாழ்த்தினார். இதை நான் சாகும் வரை மறக்க மாட்டேன்.

முன்பெல்லாம் ஹாலிவுட்டில் பிற இனத்தவர்களை மட்டம் தட்டுவது போல கேரக்டர்கள் வைப்பதுண்டு. வேலைக்காரப் பெண்மணி கேரக்டர்களில் ஸ்பானிஷ் பேசுபவர்களைப் பார்க்கலாம். கூலிப்படையினராக ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் காணலாம். தீவிரவாதிகள் என்றால் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களை வர்ணிப்பார்கள். ஆனால் இப்போது அந்த எண்ணம் மாறி விட்டது. குறிப்பாக ஸ்லம்டாக் மில்லியனர் வந்த பிறகு இது மாறியுள்ளது. ஹாலிவுட்டில் உள்ள நடிகர்களை விட இளம் இயக்குநர்கள் மிகுந்த துணிச்சலுடன் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதனால்தான் என்னைப் பல்வேறு ஹாலிவுட் படங்களில் அவர்களால் நடிக்க வைக்க முடிகிறது.

சமீபத்தில் உங்களை முத்தமிட்டபோது எந்த விசேஷமும் தெரியவில்லை என்று நடிகர் இம்ரான் கூறியிருந்தாரே என்று கேட்டபோது, இது அவரது கருத்தாக இருக்கலாம். ஆனால் எனக்கு ஹிஸ் படத்தில் பாம்பு கொடுத்த முததமும், அதற்கு நான் கொடுத்த முத்தமும்தான் திரில்லாக இருந்தது. பாம்புதான் உணமையிலேயே மிகச் சிறந்த கிஸ்ஸர். எனக்கு அதுதான் பெஸ்ட் லவ்வராகவும் இருந்தது என்றார் மல்லிகா நெத்தியடியாய்.

சரி இப்போது யாருடன் லவ்வில் இருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. வர வர நான் சாமியார் போல மாறி வருகிறேன். எனது வேலையில்தான் இப்போதெல்லாம் எனக்கு கவனம் அதிகமாக இருக்கிறது. இப்போதெல்லாம் ஆண்களை விட திரைக்கதைதான் என்னை அதிகம் கவருகிறது என்று கூறியுள்ளார் மல்லிகா.

Comments