கிளாமரைத் தாண்டி சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சமீரா ரெட்டி கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் நடித்துள்ள ‘தேஜ்’ படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அனில்கபூர், அஜய்தேவ்கனுடன் நடித்துள்ளேன். இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளேன். இந்தப் படத்திலும் ‘வேட்டை’ படத்திலும் மாறி மாறி நடித்தேன். முதல் நாள் மாடர்ன் டிரெஸ் என்றால் மறுநாள் ‘வேட்டை’க்காக பாவாடை, தாவணியில் நடித்தது வித்தியாசமாக இருந்தது. இந்தியை விட தென்னிந்திய படங்களில் நடிப்பதை முக்கியமாக கருதுகிறேன். தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டேன். கன்னடப் படங்களில் நடிக்கவில்லை. இப்போது கதைகள் கேட்டு வருகிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சிம்ரன், ஜோதிகா பெயர்கள் கிளாமரைத் தாண்டி நடிப்புக்காகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களைப் போல ஆகவேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
Comments
Post a Comment