Tuesday, January 03, 2012 12சுராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்திக்குடன் நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். சகுனி படத்தை தொடர்ந்து டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தபடத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில் அனுஷ்காவுடன் சேர்ந்து மேக்னா, சனுஷா மற்றும் நிகிதா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இதில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா தான் ஜோடியாம். அதேசமயம் மற்ற 3 ஹீரோயின்களின் ரோலும் ரொம்பவே முக்கியத்துவமும், தனித்துவம் வாய்ந்தது என்கிறார் படத்தின் டைரக்டர் சுராஜ்.
இதனிடையே ஆரம்பத்தில் நிகிதாவுக்கு பதில் லட்சுமிராயைத்தான் முதலில் தேர்வு செய்திருந்தார் சுராஜ். ஆனால் லட்சுமிராயின் கால்ஷீட் ஒத்துவராததால் நிகிதாவை தேர்வு செய்துவிட்டார்.
Comments
Post a Comment