‌காமெடி வேடத்திற்கு மாறியது ஏன்...? நடிகை ஊர்வசி பதில்!

Tuesday, January 10, 2012

பல படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஊர்வசி, ‌காமெடி வேடத்தில் அதிகம் கவனம் செலுத்துவது ஏன்...? என்பதற்கு பதில் அளித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம்மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயாகியாக நடித்துள்ள ஊர்வசி, இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் இப்போது பேச்சியக்கா மருமகன் என்ற படத்தில், தருண் கோபிக்கு மாமியராக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய நடிகை ஊர்வசி, 400க்கும் மேற்பட்ட படங்களில் நான் ஹீரோயினாக நடித்துள்ளேன். பிறகு குணச்சித்திர மற்றும் ‌காமெடி வேடங்களில் நடித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக காமெடி வேடத்தில் அதிகமாக நடிப்பது ஏன்? என்று பலரும் கேட்கின்றனர். நடிகைகளை ‌பொறுத்த வரை ஹீரோயின் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் அதிகம் நடிக்கின்றனர். காமெடி வேடத்தில் அவ்வளவாக நடிப்பதில்லை. டைரக்டர்களும், கதாசிரியர்களும் பெண்கள் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

காமெடியில், ஆச்சி மனோரமாவுக்கு பிறகு அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. ஆனால் எனக்கு மாயாபஜார், வனஜா கிரிஜா, மகளிர் மட்டும் போன்ற படங்களில் காமெடி வேடத்திற்கு கிடைத்த வரவேற்பு, என்னை மேலும் காமெடி ரோலில் நடிக்க தூண்டியது. அதுபோன்ற நல்ல வேடங்கள் வந்தால் தொடர்ந்து காமெடி வேடத்தில் நடிப்பேன் என்றார்.

Comments