ரஜினி, அமிதாப் பச்சன் இணைகிறார்கள்!!!

ரஜினிகாந்தும் அமிதாப்பச்சனும் இணையும் படத்தை இயக்க இருப்பதாக, தெலுங்குப் பட இயக்குனர் பூரி ஜெகநாத் தெரிவித்துள்ளார். ரஜினியும் அமிதாப்பச்சனும் கடைசியாக, ‘அந்தா கானூன்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி 28 வருடங்கள் ஆகிவிட்டது. இதையடுத்து இப்போது மீண்டும் இணைய இருக்கின்றனர். அமிதாப் நடித்த, ‘புட்டா ஹோகா தேரா பாப்’ படத்தை இயக்கிய புரி ஜெகநாத் இதை இயக்குகிறார். இதுபற்றி பூரி ஜெகநாத் கூறும்போது, ‘‘சென்னையில் ரஜினியை சந்தித்து இந்த ஐடியாவை சொன்னேன். ரஜினி உற்சாகமாகிவிட்டார். இதில் நடிக்க அவருக்கு இருக்கும் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டேன். ரஜினியையும் அமிதாப்பையும் இயக்குவது எனது வாழ்நாள் கனவு. இப்போதுதான் அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இருவரையும் இயக்குவது சாவாலான விஷயம்தான்’’ என்றார்.

Comments