
மயக்கம் என்ன படம் வெளியாகி மாதங்கள் கடந்த பின்னர், அந்தபடத்தில் உள்ள ஒரு பாட்டுக்கு இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் மயக்கம் என்ன. இப்படத்தில் காதல் என் காதல் கண்ணீருல... என்று தொடங்கும் பாடலில் அடிடா அவள உதடா அவள வெட்றா அவள... என்று வரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பொண்ணுங்கள் எல்லாம் நம் வாழ்வின் சாபம் என்ற வரியும் உள்ளது. இவை பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது ராமசுப்ரமணியம் என்பவர் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், பெண்களை சக்தி என்று நாம் அழைக்கிறோம். பெண்களை கொண்டாடும் நம் கலாச்சாரத்துக்கு முற்றிலும் எதிரானது இந்த பாடல். இவை பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. மேலும் அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் பாடல் இது என்று கூறியுள்ளார்.
இதனிடையே படம் வெளியாகி இத்தனை நாளுக்கு பிறகு, இப்போது இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்று செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment