Tuesday, January 17, 2012மலேசியாவில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை மோனிகா அங்குள்ள தமிழர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். அவருடன் புழல் பட நாயகன் முரளியும் கலந்து கொண்டார்.
மலேசியாவில் நடைபெற்ற படப்படிப்பில் நடிகை மோனிகா கலந்து கொண்டார். அப்போது மலேசியாவில் உள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவில் மோனிகா கலந்து கொண்டார்.
பொங்கல் விழாவையொட்டி கோவில் முன்பு பொங்கல் பானை வைத்து அதில் தானியங்களை படையலிட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. நடிகை மோனிகா பானையில் அரிசியை கொட்டி தீ மூட்டினார்.
பொங்கல் பொங்கி வந்த போது விழாவில் கலந்து கொண்ட தமிழ் குடும்பத்தினர் பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு பொங்கி வந்த பொங்கலை கடவுளுக்கு படையலிட்டு வணங்கினர்.
சிறப்பு பூஜைக்கு பிறகு பொங்கல் அனைவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட மோனிகா பாட்டு பாடி, நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார். புழல் படத்தின் கதாநாயகன் முரளியும், பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
Comments
Post a Comment