இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் ஜெர்மன் திரைப்பட இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி குடியரசு தின விழாவன்று சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்துகொண்டார். அதைக்கண்டு ரகுமான் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர். இதுபற்றி ரஜினி மகள் சவுந்தர்யா கூறும்போது,‘‘வீட்டிலிருந்து நான் புறப்பட்டபோது அப்பா(ரஜினி)விடம், நிகழ்ச்சிக்கு போய்விட்டு வருவதாக’’ கூறினேன். ‘என்ன நிகழ்ச்சி?’ என்றார். ‘‘ரகுமான் இசை நிகழ்ச்சி’’ என்றேன். உடனே, ‘நானும் வருகிறேன்’ என்று புறப்பட்டார். இதை யாரும் எதிர்பார்க்காததால் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இசை நிகழ்ச்சியை ரசித்து கேட்டார். பின்னர் ரகுமானுடன் சிறிது நேரம் மனம்விட்டு பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்’’ என்றார்.
Comments
Post a Comment