சென்னையில் ரிலீஸ் ஆகாத தமிழ்ப்படம்!!!

சிவாஜி, சுஜாதா ஜோடி சேர்ந்த படம் ‘அந்தமான் காதலி’. முக்தா சீனிவாசன் இயக்கினார். எம்.எஸ்.வியின் இசையில் யேசுதாஸின் குரலில் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற படம். கவிதா, சுகுமாரி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் தெலுங்கு ஹீரோ சந்திரமோகனும் நடித்திருந்தார். ‘பேய் மனைவி’ என்ற நாவலை தழுவி மலையாளத்தில் ‘ரக்ஷகானம்’ என்ற பெயரில் படம் வெளியானது. இதை ஷீலா இயக்கி இருந்தார். இதே படம் தெலுங்கில் கிருஷ்ணா நடிப்பில் ‘தெவுடு கௌ¤ச்சாடு’ என ரிலீஸ் ஆனது. அந்த படம்தான் தமிழில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ பெயரில் உருவானது. துரை இயக்கியிருந்தார். பத்திரிகையாளர் மதிஒளி சண்முகம் திரைக்கதை, வசனங்களை எழுதினார். ரஜினிகாந்த், லதா, விஜயகுமார், பத்மபிரியா, மனோரமா, புஷ்பலதா, சுருளிராஜன், மதிஒளி சண்முகம் நடித்திருந்தனர்.

அரசு திரைப்பட கல்லூரிக்கு தனி மதிப்பு தந்த படம் ‘அவள் அப்படித்தான்’. காரணம், இந்த படம் மூலம்தான் திரைப்பட கல்லூரி மாணவர்களாலும் சாதிக்க முடியும் என தமிழ் சினிமாவில் நிரூபிக்கப்பட்டது. திரைப்பட கல்லூரி மாணவரான சி.ருத்ரைய்யா, கதை மற்றும் வசனங்கள் எழுதி தயாரித்து இயக்கினார். திரைக்கதையை அவருடன் சேர்ந்து வண்ணநிலவன், சோமசுந்தரேஷ்வர் ஆகியோர் எழுதினர். திரைப்பட கல்லூரி மாணவரான நல்லுசாமி ஞானசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். கண்ணதாசனுடன் சேர்ந்து கங்கை அமரன் பாடல்களை எழுதினார். இளையராஜா இசையமைத்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன், குட்டி பத்மினி ஆகியோருடன் கவுரவ வேடத்தில் சரிதா நடித்தார். படம் சிறப்பாக ஓடியது.

எஸ்.ஏ.சந்திரசேகரன் சினிமா உலகிற்கு பிரவேசமானது இந்த ஆண்டு தான் (1978). எஸ்.சி.சேகர் என்ற பெயரில் படத்தை தயாரித்து, எழுதி, இயக்கினார். படத்தின் பெயர் ‘அவள் ஒரு பச்சை குழந்தை’. அவரது மனைவி ஷோபா பின்னணி பாடகியாக இப்படத்தில் அறிமுகமானார். வ¤ஜயகுமார், பவானி நடித்தனர். ரஜினி, ஸ்ரீபிரியா, மனோரமா, கீதா, சுருளிராஜன் நடித்த படம் ‘பைரவி’. பாஸ்கர் இயக்கினார். கதை எழுதி கலைஞானம் தயாரித்தார். சிவகுமார் இரட்டை வேடம் ஏற்ற படம் ‘சிட்டுக் குருவி’. நாயகியாக சுமித்ரா நடித்தார். தேவராஜ் மோகன் தயாரித்து இயக்கினர். திரைக்கதை, வசனங்களை வாலி எழுதினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கமல், ரஜினி ஜோடி திரையுலகில் ராஜ¢ஜியம் செய்து கொண்டிருந்தது. யாரை பார்த்தாலும் இந்த ஜோடியை நடிக்க வைக்கவே விரும்பினர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டானதால் இருவரின் கால்ஷீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட். டிரெண்டுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதரும் இவர்களை வைத்து படம் எடுத்தார். அதுதான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’. இளையராஜா இசையமைத்தார். ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, கோபாலகிருஷ்ணன், ஒய்.ஜி. பார்த்தசாரதி நடித்தனர். பாலசந்தருடன் கலக்கிக் கொண்டிருந்த ரஜினி, கமல் முதல்முறையாக ஸ்ரீதருடன் சேர்ந்த இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது.

ரஜினி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தார். சிவாஜியுடன் சேர்ந்து அவர் நடித்த படம் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’. கே.ஆர்.விஜயா, சுமித்ராவும் நடித்திருந்தனர். யோகானந¢த் இயக்கினார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை இயக்கிய பீம்சிங், மீண்டும் அவரது நாவலான ‘கருணையினால் அல்ல’ நாவலை தழுவி உருவாக்கிய படம் ‘கருணை உள்ளம்’. ஸ்ரீகாந்த், கே.ஆர்.விஜயா, சுகுமாரி, விஜயகுமார், சோ நடித்தனர். பழம்பெரும் தயாரிப்பாளர் ஆர்.கல்யாணராமன் தயாரித்த படம் ‘கவிராஜ காளமேகம்’. ஜி.ஆர்.நாதன் இயக்கம். டி.எம். சவுந்தரராஜன் ஹீரோ. நிர்மலா, மனோகர் நடித்தனர். படம் வியாபாரம் ஆகாததால் சென்னையில் ரிலீஸ் ஆகவில்லை. ராதிகா அறிமுகமான படம் ‘கிழக்கே போகும் ரயில்’. பாரதிராஜாவுக்கு மீண்டும் பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்த படம் இது. புதுமுகம் சுதாகர் ஜோடியாக ராதிகா நடித்தார். பாக்யராஜ், கவுண்டமணி மற்றும் பலருடன் உஷா ராஜேந்தர் நடித்தார். Ôசவேரே வாலி காடிÕ பெயரில் இந்தியிலும் வெளியானது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

Comments