குறும்படத்தில் நடிக்கிறார் கார்த்தி!!!

Tuesday, January 17, 2012
சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் உருவாகும் குறும்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கார்த்தி, தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இப்போது முதுமுக இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் சகுனி படத்திலும், சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விழிப்புணர்வுக்காக ஒரு குறும்படத்தில் நடிக்கிறார் கார்த்தி. நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்-லைன் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‌தமிழ்நாடு காவல் துறை சார்பாக ஒரு குறும்படம் இயக்கப்படுகிறது. 5 நமிடங்களில் உருவாக இருக்கும் இந்தகுறும்படத்தில் கார்த்தி தோன்றுகிறார். இதில் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி ஆன்-லைன் மோசடிகள் மற்றும் பிற மோசடிகள் நடக்கிறது என்பதை பற்றி கார்த்தி விளக்க உள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த குறும்படம், மக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தளங்கள், தியேட்டர்கள், பெரிய ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல இடங்களில் பெரிய திரையில் காண்பிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பது போலீஸின் நம்பிக்கை.

Comments