
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜீவாவும், நானும் விஜய்யை அடிப்பது போன்று காட்சி. ஆனால் இதில் நடிக்க நான் தயங்கினேன். பிறகு விஜய்யே வந்து தயங்காதீர்கள், இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அந்தகாட்சியில் நடித்தேன். விஜய் சொன்னது போன்று பலரும் அந்தக்காட்சியை பாராட்டினார்கள். சூட்டிங்கில் மூவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். நண்பன் படம் மூன்று ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மூவருக்கும் சமமான கேரக்டர் தான். இதனால் மூவரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அப்படி ஒரு கேரக்டரை அமைத்து கொடுத்த டைரக்டர் ஷங்கர் சாருக்கு நன்றி. ஷங்கர் சார் டைரக்டர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நடிகரும் கூட. அவர் எப்படி நடிக்க சொன்னாரோ, அதன்படி அப்படியே நடித்தேன் என்றார்.
Comments
Post a Comment