Tuesday, January 03, 2012 12
கார்த்தி படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கப்பட்டார். சுராஜ் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி, அனுஷ்கா நடிக்கின்றனர். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் லட்சுமிராய் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் சுராஜ் கூறியதாவது: கார்த்தி நடிக்கும் இப்படத்தில் அனுஷ்காதான் ஹீரோயின். இந்த ஜோடி தவிர 3முக்கிய பாத்திரங்களில் 3 நடிகைகள் நடிக்க வேண்டி இருந்தது. இதற்காக லட்சுமிராயிடம் பேசப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் எங்களுக்கு ஏற்றவகையில் கிடைக்கவில்லை. இதனால் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது நிகிதா அந்த வேடத்தை ஏற்கிறார். மேலும் மேக்னா, சனுஷா ஆகியோரும் நடிக்கின்றனர் என்றார். இதுபற்றி நிகிதா கூறும் போது, ‘‘தற்போது சங்கொலி ராயன்னா என்ற கன்னட படத்தில் நடிக்கிறேன். சுராஜ் இயக்க, கார்த்தி நடிக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று கிசுகிசு வெளிவந்துகொண்டிருந்தது. மற்றொரு நடிகையும் இந்த வேடத்தில் நடிப்பதாக பேட்டி அளித்திருந்தார். தற்போது அது சந்தேகம் நீங்கிவிட்டது. இவ்வேடத்தில் நடிக்க எனக்கு அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன்’’ என்றார்.

Comments
Post a Comment