பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள 'நண்பன்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்துக்கு பிறகு, சிறிது காலம் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ள ஷங்கர், கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி தர ஒப்புக்கொண்டுள்ளார். படத்திற்கு யார் ஹீரோ என்பது குறித்து எந்த ஒரு தகவலையும், தயாரிப்பு நிறுவனமோ (அ) ஷங்கரோ சொல்லவில்லை. தற்போது இந்த தகவல் கசிய தொடங்கியுள்ளது. ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பெயர், இசையமைப்பாளர், ஹீரோயின் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. ஏற்கனவே ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment