
ஆனால் அவரை வேறு பாணியில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு இணையாக இன்றைக்கு பிரகாஷ்ராஜ் மிகப் பெரிய குணசித்திர நடிகராக இருக்கிறார். ஆனால் அவரை வில்லனாக பல படங்களில் பார்க்க வேண்டி உள்ளது. அவர் நடிக்கும் எல்லா படங்களையும் நான் பார்த்துவிடுவேன். குணசித்ர வேடத்தில் நூறு சதவீதம் தனது நடிப்பை தருவதுபோல் வில்லன் வேடத்திலும் தருகிறார். ‘கில்லி’ படத்தில் பிரகாஷ்ராஜ் ‘செல்லம்’ என்று அடிக்கடி சொல்வார்.
அப்படத்தில் விஜய்யை மணப்பதற்கு பதில் பிரகாஷ்ராஜையே த்ரிஷா கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. இவ்வாறு மகேந்திரன் கூறினார். கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். div>
Comments
Post a Comment