'வெண்ணிற ஆடை' மூர்த்தி காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசலை ஊற்றிய பங்க் ஊழியர்-செம சண்டை!

Thursday, January 12, 2012
புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பெட்ரோல் போடுவதற்காக பங்குக்குக் காருடன் போனபோது பெரும் சோதனையை சந்திக்க நேரிட்டு விட்டது. அதாவது பெட்ரோலுக்குப் பதில் பங்க் ஊழியர் டீசலை போட்டு நிரப்பி விட்டார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்குக் காரை விட்ட அவர் பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார்.

பங்க் ஊழியரும் வெண்ணிற ஆடை மூர்த்தியை வெகு அருகே பார்த்த குஷியில் டேங்க்கை படு வேகமாக நிரப்பினார். ஆனால் போட்டு முடிந்த பிறகுதான் தெரிந்தது அது பெட்ரோல் அல்ல டீசல் என்று.

காரும் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் மூர்த்தி கடும் டென்ஷனாகி விட்டார். என்னய்யா, இப்படிப் பண்ணிட்டீங்க என்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் சண்டைக்குப் போய் விட்டார். இதையடுத்து அவரிடம் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

அதன் பின்னர் டேங்க்கிலிருந்த டீசலை முழுமையாக வெளியே எடுத்தனர். பிறு டேங்க்கையும் சுத்தப்படுத்தி மறுபடியும் பெட்ரோல் போட்டு நிரப்பி அனுப்பி வைத்தனர்.

பெட்ரோல் போட வந்தால் இப்படி டென்ஷனாக்கி அனுப்பி வைத்ததால் அப்செட்டாகித் திரும்பிப் போனார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

அடுத்த வார டிவி காமெடி நிகழ்ச்சியில் இந்த 'பீஸையும்' மூர்த்தி ஒரு 'சீனாக' வைப்பார் என்று எதிர்பார்ப்போம்...!

அடுத்த தடவையாவது பார்த்து ஊத்துங்க தம்ப்ரீ...!

Comments