
நத்தம்:தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை குஷ்பு இன்று காலை நத்தம் கோர்ட்டில் ஆஜரானார். சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நத்தம் ரவுண்டானா அருகே நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகக் கூறி நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி நடிகை குஷ்புக்கு நத்தம் முன்சீப் கோர்ட் ஏற்கெனவே சம்மன் அனுப்பியி ருந்தது. அதன்பேரில் இன்று காலை 10.15 மணிக்கு நடிகை குஷ்பு நத்தம் முன்சீப் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Comments
Post a Comment