எம்.ஜி.ஆர்., கமல், அஜித் மாதிரியான ஹீரோக்களை அறிமுகப்படுத்துங்கள்: சுஹாசினி வேண்டுகோள்!

Sunday, January 08, 2012
ஹீ‌ரோயின்களை மட்டும் அழகாக உள்ளவர்களை அறிமுகப்படுத்துகிறீர்களே, அதேபோல் ஹீரோக்களையும் அழகாக உள்ளவர்களை அறிமுகப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை சுஹாசினி. நட்டி குமார் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ள பனிதுளி படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் சென்னையில் நடந்தது இதில் நடிகை சுஹாசினியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் ‌பேசிய நடிகை சுஹாசினி, நான் ஒரு நடிகையாகவோ அல்லது சினிமா சார்ந்தவராக இல்லாமல் ஒரு சாதரண பெண்ணாக, ஒரு ரசிகையாக ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஒரு படத்தில் நடிகையை மட்டும் அறிமுகப்படுத்தும் போது அவர் அழகாக இருக்கிறாரா என்று பார்க்கிறீர்கள். ஏன் ஹீரோக்களுக்கு அப்படி பார்ப்பதில்லை. எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ் ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். ரசிகருக்கு மட்டும் அழகான ஹீரோயின்களை அறிமுகப்படுத்துகிறீர்களே... ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன் என்று கூறினார்.

Comments