அனுஷ்கா கால்ஷீட் கிடைக்கவில்லை அஜீத்துக்கு ஹீரோயின் தேடும் இயக்குனர்!

2nd of January 2012
அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா கால்ஷீட் கிடைக்காததால் வேறு ஹீரோயினை தேடுகிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘பில்லா 2’ படத்தில் அஜீத் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் வேறு படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் தர இயலவில்லை. இதையடுத்து பிரபல நடிகைகளிடம் கால்ஷீட் பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர்.

பில்லா’ முதல்பாகத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். ‘பில்லா 2’ படத்தையும் அவரே இயக்குவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு படத்தை இயக்க சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பு கைநழுவியது. தற்போது சக்ரி டுலிட்டி இப்படத்தை இயக்கி வருகிறார். அஜீத், விஷ்ணுவர்தன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘சிறுத்தை’ ஷிவா இயக்கும் மற்றொரு படத்திலும் அஜீத் நடிக்கிறார்.

Comments