சென்னை உள்ளிட்ட 4 நகரங்கள் ரஹ்மான் இசைநிகழ்ச்சி!

Sunday, January 08, 2012
சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, என 4 நகரங்களில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சி பற்றிய மற்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஒரு தமிழனாக பிறந்து உலகமே வியக்கும் இயக்குனரான ஸ்பீல்பெர்க் படத்திற்கே இசையமைத்து கொண்டிருக்கும் ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சி தகவல் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.

ஏனென்றால் ரஹ்மான் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை இதுவரை நடத்தியதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக மிக பிரமாண்டமாக நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். மேலும் ரஹ்மானின் இசைப்பள்ளியில் சேர்ந்து இசை பயின்று வரும் மாணவர்களும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அமர்க்களப்படுத்த உள்ளனர் என்பது இந்த இசை நிகழ்ச்சியின் இன்னொரு ஹைலைட். மேற்படி நான்கு நகரங்களில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் இந்த மாணவர்களும் பங்கு பெற உள்ளனராம்.

Comments