
அஜித் நடித்து வரும் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்திற்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
தூத்துக்குடியில் சாதரண மனிதனாக டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. படத்தின் சூட்டிங் பெரும்பகுதி முடிவடைந்துள்ள நிலையில் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. கோவப்பார்வையோடும், கையில் துப்பாக்கியோடும் வெளியாகியுள்ள இந்த ஸ்டில்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கூடவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு, அதேபோல் ஒவ்வொரு டானுக்கும் ஒரு வரலாறு உண்டு என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
Comments
Post a Comment