2011ம் ஆண்டில் மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய வரவாக வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் நடித்தது 3 படங்கள் தான் என்றாலும் அம்மணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அழகான முகமும், அம்சமான உடல் அமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடம் வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா, தன்னை பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் தொகுப்பு இதோ...நிஜ பெயர் : ஹன்சிகா மோத்வானி
சினிமா பெயர் : ஹன்சிகா மோத்வானி
பிறந்தது : மும்பை
படித்தது : பொலிட்டிகல் சயின்ஸ் (லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்)
முதல்படம் : தேஷ்முத்ரு (தெலுங்கு)
முதல் படம் வெளியூர் சூட்டிங் : ஜெர்மனி (ஆப்கே சரூர்- இந்தி படம்)
மறக்கமுடியாத நபர் : அம்மா
அதிகமுறை பார்த்த படம் : சத்மா
அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை : ஓ காட்
பிடித்த உணவு : இட்லி, தோசை
தவிர்க்க விரும்பும் உணவு : சீஸ், ஆயில் ஃபுட்
போக விரும்பிய வேலை : எப்பவுமே நடிகையாவது தான் (சின்ன வயசுல ஹிருத்திக் கூட நடிச்சிருக்கேன்)
பிடித்த கலர்/உடை : ரெட், வொயிட் - சல்வார்
எதைப்பார்த்தால் பொறாமை வரும் : எப்பவும், எதைப் பார்த்தாலும் வராது
பயப்படும் ஒரே விஷயம் : கோழி
எந்த விஷயத்தில் அதிக ஆசை : ஷீ மற்றும் பேக்
வெளிப்படையாக பேசி, மற்றவர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவம் : ரொம்ப அமைதியான பொன்னு நான் - அப்படியெல்லாம் லூஸ் டாக் விடமாட்டேன்.
நன்றி சொல்ல விரும்பும் நபர் : கடவுள்
நினைவில் இருக்கும் பள்ளி ஆசிரியர் : லூலா (கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக முதல்வர்)
பயன்படுத்தும் சோப்பு : அம்மா ஸ்கின் டாக்டரா இருப்பதால, எந்த சோப்பும் பயன்படுத்துவது இல்லை. கடலைமாவு மட்டும் தான்.
அதிக உடைகள் வாங்கும் இடம் : பாரீஸ் - லண்டன்
உணவு பழக்கம் தினமும் : காலை - காய்கறி மற்றும் முட்டை வெள்ளை கரு, மதியம் - ரொட்டி - பருப்பு, இரவு - காய்கறி சூப், சாலட்
ஆண்களின் பழக்கம் கற்றுக் கொள்ள விரும்புவது : ஒன்னும் இல்லை
உணர்ச்சி வசப்பட்டால் : நான் நல்லா படம் வரைவேன்
உங்க ப்ளஸ் : என்னிடம் எல்லாமே ப்ளஸ் தான், நல்லா சமைப்பேன், மரியாதையா நடப்பேன், எல்லோரையும் நேசிப்பேன்
உங்க மைனஸ் : ஒன்னும் இல்லை
பிடிவாதம் : ரொம்ப சாப்ட் நான், எந்த கெட்ட பழக்கமும் என்கிட்ட இல்லை
மறக்க முடியாத சம்பவம்/வருஷம் : 2002-ஆனால் அது ரொம்ப பர்சனல்
Comments
Post a Comment